~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Sunday, April 22, 2012

அக்சய திருதிகை

அக்சய திருதிகை

a
"அட்சயம் "என்றால் தேயாமல் வளர்வது என்று பொருள்.அட்சய திருதிகை என்றால் "வளர்ச்சியை ஏற்படுத்தும் தினம் ' என்பது அர்த்தம்.இது தங்கம் வாங்கும் தினம்,என்றே பலரால் கருதப்படுகிறது.

ஐதீகப்படி இது ஒரு விரததினம். விரதம் இருந்து,விருத்தி தரும் மங்கலப் பொருள் வாங்கி அதை வைத்து இறைவனை வேண்டும் ஒரு சுப தினம்.உரிய முறைப்படி இதனை மேற்கொள்ளும் போது தான் அஷ்ட அக்ஷய லஷ்மி கடாட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.புதிதாக வாங்கும் பொருள் தங்கம் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.உப்பு ,மஞ்சள் என்பனவாகக் கூட இருக்கலாம்.



அன்றைய தினம் விரதமிருந்து ,குத்து விளக்கு ஏற்றி ,நிறைகுடம் வைத்து ,மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.பின்  புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன் வைக்க வேண்டும்.முதலில் விநாயகரை வேண்டிக்க் கொண்டு ,சிவதுதி ,அக்ஷய லக்சுமி துதி என்பவற்றை சொல்லி தூப தீப ஆராதனை செய்ய வேண்டும்.

அக்ஷய திருதிகை அன்று விரதம்இருப்பது,,பூஜை செய்வது,புதிய பொருள் வாங்குவது ,என்பவற்றை விட செய்ய வேண்டிய முக்கியமான அம்சம் தானதர்மம் செய்வது அவசியம். இவற்றை கடைப்பிடிபீர்கள் ஆயின் உங்கள் வாழ்வில் அக்சயமாய் செல்வமும்,மகிழ்வும் என்றும் பொங்கும்.Wish You Happy Akshaya Tritiya

No comments:

Post a Comment