~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Thursday, January 26, 2012

700 கோடியில் நீங்கள் ........????

700 கோடியில் நீங்கள் ........????

 உலக மக்கள் தொகை 700 கோடியைத்தாண்டியது தெரியும் அதில் நீங்கள் எத்தினையாவது நபர் என்று தெர்யுமா ?
ஐ . நா வின் மக்கள் தொகை நிதியமைப்பு உருவாக்கியுள்ள WWW .7 billion  and  me  org  என்ற இணையததளத்தில் நுழைந்து அதில் கேட்க்கப்பட்டுள்ள தகவல்களுக்கு விடையளித்தால்" நீங்கள்  உலகின் எத்தனையாவது நபர்?" என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் பல சுவாரசிய தகவல்களையும் பெற்றுகொள்ளலாம்.
clik here    http://www.7billionandme.org/about.php  இங்கே சொடுக்கவும் .

Sunday, January 15, 2012

மைக்கல் ஏஞ்செலோ



ரோம் இல் போப் ஆண்டவரின்  அதிகாரபூர்வமான மாளிகையில் இருக்கின்ற sisdine chappel church இன் மேற் கூரையில் அழகான கண் ணைக் கவரும் கருத்தான   ஓவியங்களை தலைகீழாக மைக்கல் ஏஞ்செலோ வரைந்துள்ளார் .



இதனால் அவருக்குக்கு ஏற்பட்ட விபரீதம் என்ன தெரிமா? தலை கீழாக பார்த்துக்கொண்டே ஓவியங்களை அவர் வரைந்ததனால் மைக்கல் ஏஞ்செலோவினுடைய கண்கள் ஒருவிதமாகப் பாதிக்கப்பட்டதாம்.அவர் ஒரு புத்தகத்தை  வாசிக்கவேண்டும் என்றால் அதைக் கூட  தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டுதான்  படிக்க முடியும்  என்ற நிலை ஏற்பட்டு விட்டதாம்.


  

Wednesday, January 4, 2012

மனதைத்தொட்ட கவிதை

"காக்கைச் சிறகினிலே "என்ற சிற்றிதழ் ஒன்றில் "ஷீர்கோ பெகாசஸ் "எழுதிய கவிதை இது.வாசித்தபோது ஏதேதோ நினைவுகள் ,



'வான்வெளியில் கொல்லப்பட்டன

அந்தப் பறவைகள்

கொலைகாரர்களுக்கு எதிராக

நட்சத்திரங்களும் மேகங்களும்

காற்றும் கதிரவனும்

சாட்சி கூறவில்லை என்றாலும்

அடிவானம் அதுபற்றிக்

கேட்க விரும்பவில்லை என்றாலும்

மலைகளும் ஆறுகளும்

அவற்றை மறந்துபோய்விட்டாலும்

ஏதேனும் ஒரு மரம்

அந்தக் கொடுஞ்செயலைப்

பார்த்துத்தானிருக்கும்

தன் வேர்களில்

அக்கொடியோனின் பெயரை

எழுதிவைக்கத்தான் செய்யும்!'

Sunday, January 1, 2012

ஜாக்கி சானின் சாகசங்கள்


ஜாக்கி சானின் சாகசங்கள்





ஜாக்கி சானின் சாகசங்களைப் பார்ப்பதென்றால் குட்டிகளுக்கு மிகவும் கொண்டாடம் தான் ."சினிமாவில் அதிக சண்டைக் காட்சிகளை நிகழ்த்தி உயிரோடு வாழும் நடிகர் "என்ற வித்தியாசமான கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் இவர்.ஜாக்கி நடித்த நூறாவது படம் "1911 "ஆகும்.தனது எட்டாவது வயதில் முதலாவது படத்தில் நடித்தார்.சண்டையில் அப்போதே கலக்கிய அப் படத்தின் பெயர் "பிக் அண்ட் லிட்டில் வாங் டின் பார் ",வெளிவந்த ஆண்டு 1962 .

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஒரு முறை இஸ்ரேல நாட்டு ஜனாதிபதியாகும்  வாய்ப்பு வலிய வந்தது.ஆனால் அவரோ அதை மறுத்து விட்டார்.அதற்கு அவர் கூறிய காரணம் "பிரச்சனைகளுக்குத தீர்வு காணும் அளவிற்கு என் மூளையில் எதுவும் இல்லை."

வினோத விலங்கு

ஆடுவர்க் (aaduvark )


 



இது பார்ப்பதற்கு கங்காரு போல தோற்றமளிக்கும் ஒரு   விலங்குஆகும்."ஆடுவர்க்" என அழைக்கப்படும் இவ் விலங்கு ஆபிரிக்காவில் காணப்படுகிறது. கிரேக்கப் பெயரான இதன் கருத்து "பாத தோண்டி "என்பதாகும்.உடலும் வாலும் கங்காரு போல தோன்றும்.ஆனால் முகமும் காதும் கங்காரு போல காணப்படும்."ஆர்தர்" என்னும் சிறுவர் தொடரில் இவ்விலங்கு கார்டூன் கதாப்பாத்திரமாக பிரபல்யம்  பெற்றுள்ளது.

               கங்காரு