~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Saturday, December 31, 2011

கிறிஸ்மஸ் தாத்தா

                                                      கிறிஸ்மஸ் தாத்தா



 கிறிஸ்மஸ் தாத்தாவிற்கும் பைபிளுக்கும் இடையில் தொடர்பு  உண்டா என்பது பலரதும் சந்தேகமாகும்.இவரது உருவம் இல்லாது கிறிஸ்மஸ் கொண்டாடமே இல்லை என்னுமளவிற்கு முக்கியத்துவம் பெற்றது எப்படி?,

உண்மையில் ஒரு கற்பனை பாத்திரம் ஆகும்.துருக்கியில் வாழ்ந்த புனித நிக்கலஸ் என்னும் பாதிரியாரின் நினைவாகவே இப்பாத்திரம் உருவானது,இப்பாதிரியார் ஏழை மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவர்.குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டு உதவி புரிந்தவர்.கிளமென்ட் மூர் என்னும் கவிஞர் "ஜிங்கிள் பெல் "என்னும் தனது கவிதையில் முதன் முதலாக கிறிஸ்மஸ் தாதாவை சித்தரித்தார்.இப்பாத்திரம் முதன் முதல் அமெரிக்காவில்தான் பிரபல்யம் அடைந்தது.அதன் பின்னர் உலகெங்கும் பரவிற்று.
கிறிஸ்மஸ் தாத்தா "தாம் விரும்பும் பரிசுப் பொருளை புகைக் கூண்டின் ஊடாக ,காலுறைகளில் வைத்து ,போட்டுச்செல்கிறார் "என குழந்தைகள் நம்புகின்றனர்.

Tuesday, December 27, 2011

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

                      சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.
உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.
நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.
மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு

Monday, December 26, 2011

யோக நிலை

                                             யோக நிலை
மனிதன்  சுகபோகங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான்.சுக போக வாழ்க்கை போலியானது.உண்மையான ஆத்ம சந்தோசம் இதனால் கிட்டுவதில்லை.புகழ்ச்சியும்,நிந்தனையும் மனதை அலைக்களிக்காத மனத்திடமான திருப்தியான வாழ்க்கைதான் ஒருவனுக்கு உண்மையான ,நிம்மதியான வாழ்வாகும்.

சில யோகசாதனைகள் மூலம் மனிதன் மிக மேம்பட்ட உன்னத மன நிலையைப்  பெறலாம் என பல மகான்களும்,யோகிகளும் நிரூபித்துள்ளனர்.இந்த மகொனதநிலையை சாமானிய மனிதனால் எட்டிப்பிடிக்க இயலுமா?,சிலர் சராசரி மனிதனால் செய்யமுடியாத செயல்களைச் செய்வது யோகம் என எண்ணுகின்றனர்.இவை தவறான கருத்துக்கள்.

யோகத்தில் சிறந்த யோகம் எது?பிறர் செய்யும் அவமரியாதையும்,துன்பத்தையும் பொறுப்பதே ஆகும்.

இயேசு நாதர் தனது பிரச்சங்கமொன்றில் "உன்னுடைய எதிரிகளை நேசிக்கவும்,உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதிக்கவும் உன்னை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யவும் ,இவர்கள் யாவருக்காகவும் பிராத்தனை செய்.",என்கிறார்.

புத்த பகவானும் மனிதன் தனது வறுமை,நோய்,அறியாமை,அகம்பாவம், முதுமை,இறப்பு,பற்றிய பயம்,துன்பம் ஆகியவற்றை நீக்குவதே யோகமாகும் என்கிறார்.
ஆசைகள் நீங்க புத்தர் கூறும் எட்டு வழிகள்,(அ)நல்வழி (ஆ)நற்செயல் (இ)நல்ல பேச்சு,(ஈ)நல்ல மனம் (உ)நல்ல வாழ்க்கை முறை (ஊ)நன்முயற்சி (எ)நல்ல எண்ணம்,(ஏ)நல்ல தியானம் (ஒ)அனைவரிடத்தும்  அன்பு (ஓ)ஆசைகளை துறத்தல் .

கீதையிலும் "அலையும் மனதை பயிற்சியாலும்,வைராக்கியதாலும் அடக்கலாம் ,எப்பொழுதும் மனிதன் தன மனதில் எழும் ஆசைகளை கட்டுப்படுத்தி திட புத்தியுடன்  இருப்பானானால் அவனே உண்மையில் மகிழ்ச்சயுடையவன்."எனப்படுகிறது. 

Sunday, December 25, 2011

எட்டின் மகிமை -3-அஷ்ட ஐஸ்வரியங்கள்


அஷ்ட ஐஸ்வரியங்கள்
  1.  தனம்
  2. தானியம்
  3. நிதி
  4. பசு
  5. புத்திரர்
  6. வாகனம்
  7. சத்தம்
  8. தைரியம்

எட்டின் மகிமை -2-அஷ்ட புஷ்பங்கள்

அஷ்ட புஷ்பங்கள்

  1.  புன்னை
  2. செண்பகம்
  3. பாதிரி
  4. வெள் எருக்கு
  5. நந்தியாவர்த்தம்
  6. அரளி
  7. தாமரை
  8. நீலோற்பம்


எட்டின் மகிமை -1-அஷ்டகுல பர்வதம்

அஷ்டகுல பர்வதம் (எட்டு சிறப்புப் பெற்ற மலைகள் )
.
  1. இமயம்
  2. மந்தரம்
  3. கயிலாயம்
  4. விந்தியம்
  5. நிடதம்
  6. நீலம்
  7. ஏமகூடம்
  8. கந்தமாதனம்

Saturday, December 24, 2011

சங்க கவிதை உலகில் நட்பின் இலக்கணம்!!!

சங்ககாலத்தில் வாழ்ந்த " ஆந்தையார்" என்ற புலவர் ,அரசனுக்கே அறம் கற்பித்த சான்றோர் ஆவார்.பாண்டியன் நெடுங்கிள்ளி என்ற மன்னனுக்கு மக்களின் வரிச்சுமையை எடுத்துக் காட்டி நன்னெறி புகட்டியவர்.   பாண்டிய நாட்டின்  "பிசிர்"என்ற சிற்றூரில் பிறந்தவர் என்பதால் "பிசிராந்தையார்"என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் சோழமன்னன் கோப்பெருஞ்சோழன் கவிஞனும் வள்ளலுமாக திகழ்ந்தான்.அவன் புகழ் கேட்டு அவன் மீது அவனை காணாமலே உயிர்நட்பு பூண்டார் பிசிராந்தையார்.அக்காலத்தில் பாண்டிய மன்னனும் சோழ மன்னனும் தீவிர எதிரிகள்.எனவே சோழனை நேரில்சென்று காண புலவருக்கு முடியாதிருந்தது .
சோழமன்னன் வடக்கிருந்து உயிர் துறக்க தலைப்பட்டான்.இதனை அறிந்த புலவர் இறுதியாக அவனைக் காண எல்லை தாண்டி வந்தார். சோழன் மீது (காணாமலே)கொண்ட பிரியத்தால் தானும் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்தார்.வடக்கிருக்கும் பந்தலில் எவரும் பேசலாகாது என்பதால் பிசிராந்தையார் சோழனிடம் ஒரு சொல் கூட பேச வாய்ப்பு கிட்டவில்லை.சங்க கவிதை உலகில் நட்பின் இலக்கணமாக இக்கதை சுட்டிக்காடப்படுகிறது.

Friday, December 23, 2011

பகவத்கீதை

பகவத்கீதை கூறும் கருத்து
 "ஒவ்வொரு மனிதனும் செயற்படக் கடமைப் பட்டவன்.செயற்பட  வேண்டியது இறைவனால் விதிக்கப்பட்ட மீறமுடியாத கட்டளை.

அவ்வாறு செயற்படும்போது  உங்கள் கடமையினை  நிறைவேற்றும் மன உணர்வு தான் உங்களுக்கு இருக்க வேண்டுமே  தவிர,அதனால் விளையும் பலனைப் பற்றிச்சிந்திக்க கூடாது.

நமது கடமையாகிய உழைப்பினை நாம் சற்றும் குறைவின்றி நிறை வேற்றும்போது நமக்குரிய பலனைத் தரும் போருப்பினை இறைவன் மேற்கொண்டுவிடுகிறார்.
இவ்வாறு பயன் கருதாது செயற்பட்டுக் கடமையாற்றுவதே ஒரு புனிதமான யோகநிலையாகும்.    

Thursday, December 22, 2011

iyarkai alaku


ரோஜாக்கூட்டம் -2

இயற்கை அழகு

ரோஜாக்கூட்டம்

கொட்டியாரம்

கொட்டியாரம்






திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் பாலசுகுமார் பல்கலை ஆளுமை கொண்ட ஒருவர்.கிழக்குப் பல்கலைக்கழகதில் விரிவுரையாளராகவும்  உப வேந்தராகவும் கடமையாற்றி யாவர்.கவிஞர் ,பாடகர்,எழுத்தாளர்,நாடகக்கலைஞர் என பல பரிமாணங்களைக் கொண்டவர்.தவிர்க்க முடியாத சில காரணங்களால் புலம் பெயர்ந்து ஐக்கிய ராச்சியத்தில் வாழ்கிறார்.இவர் தன தாய் மண்மீது கொண்ட பற்றுதலால் தனது பிரசேசம் பற்றி எழுதிய கொட்டியாரம் என்னும் நூல் ஆத்மார்த்தமான படைப்பாகும்.
இந்நூல் பற்றி இவர் பகிர்ந்துகொண்டதை இக் காணொளியில் பார்க்கலாம்.

http://youtu.be/ZkIa_WKZVk8

மன அமைதி

மன அமைதி

அமைதி நிறைந்த மனம் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும்.உள்ளத்தில் போட்டி,பொறாமை.எரிச்சல்,துவேசம்போன்ற உணர்வுகள் தலைகாட்டும்போதுதான் உள்ளத்தின் தூய்மை கெட்டுவிடுகிறது.

உண்மையான,பூரணமான அன்பு வயப்பட்டவன் நிச்சயமாக மனத்தூய்மை பெற்றவனாக இருப்பான்.
தூய்மையான உள்ளத்துக்கு அஸ்த்திவாரம் கருணை உணர்வு ஆகும்.அது போல பக்தியும் மனதை தூய்மையாக்குகின்றது.கருணை உள்ளந்தான் உலகத்தில் அனைத்து மதங்களினதும் ஆதார சுருதியாகும்.

நல்வழி

விநாயகர்
நல்வழி
கடவுள் வாழ்த்து


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர்

சொல்லும்தீதொழிய நன்மை செயல். -1

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி. -2

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. -3

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. -4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். -5

உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. -6

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. -7

ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். -8

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து . -9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும் -10

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது. -11

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு. -12

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல். -13

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும். -14

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். -15

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. -16

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்? -17

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். -18

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். -19

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும். -20

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான். -21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். -22

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. -23

நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை. -24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. -25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம். -26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். -27

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். -28

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். -29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி . -30

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. -31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. -32

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். -33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல். -34

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. -35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம். -36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி. -37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். -38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. -39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். -40