~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Saturday, December 24, 2011

சங்க கவிதை உலகில் நட்பின் இலக்கணம்!!!

சங்ககாலத்தில் வாழ்ந்த " ஆந்தையார்" என்ற புலவர் ,அரசனுக்கே அறம் கற்பித்த சான்றோர் ஆவார்.பாண்டியன் நெடுங்கிள்ளி என்ற மன்னனுக்கு மக்களின் வரிச்சுமையை எடுத்துக் காட்டி நன்னெறி புகட்டியவர்.   பாண்டிய நாட்டின்  "பிசிர்"என்ற சிற்றூரில் பிறந்தவர் என்பதால் "பிசிராந்தையார்"என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் சோழமன்னன் கோப்பெருஞ்சோழன் கவிஞனும் வள்ளலுமாக திகழ்ந்தான்.அவன் புகழ் கேட்டு அவன் மீது அவனை காணாமலே உயிர்நட்பு பூண்டார் பிசிராந்தையார்.அக்காலத்தில் பாண்டிய மன்னனும் சோழ மன்னனும் தீவிர எதிரிகள்.எனவே சோழனை நேரில்சென்று காண புலவருக்கு முடியாதிருந்தது .
சோழமன்னன் வடக்கிருந்து உயிர் துறக்க தலைப்பட்டான்.இதனை அறிந்த புலவர் இறுதியாக அவனைக் காண எல்லை தாண்டி வந்தார். சோழன் மீது (காணாமலே)கொண்ட பிரியத்தால் தானும் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்தார்.வடக்கிருக்கும் பந்தலில் எவரும் பேசலாகாது என்பதால் பிசிராந்தையார் சோழனிடம் ஒரு சொல் கூட பேச வாய்ப்பு கிட்டவில்லை.சங்க கவிதை உலகில் நட்பின் இலக்கணமாக இக்கதை சுட்டிக்காடப்படுகிறது.

2 comments:

  1. "சோழமன்னன் வடக்கிருந்து உயிர் துறக்க தலைப்பட்டான்" - what was the reason for this decision?

    ReplyDelete
  2. இவ் இடுகையை தாங்கள் பார்வையிட்டு கருத்துரை இட்டமைக்கு முதற்கண் என் நன்றிகள்.
    முதன் முதலில் தென் இந்தியா முழுமையையும் ஒரு குடையின் ஆட்சி செய்த பெருமைக்கும் உரியவர்கள் சோழர்களே.எனினும் பாண்டிய சேர பரம்பரை மன்னர்கள் எப்போழுதும் சோழ மன்னர்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.எதேச்சாதிகாரமற்ற ஆட்சி மன்னர்களின் மனதுக்கு நிம்மதியின்மையை கொடுததாகவும் கூறப்படுகிறது.
    மேலும் இக்காலத்தில் சமணமதம் செழித்தோங்கியது.இதனை ஆதரித்து இம்மதக் கொள்கைகளில் ஈடுபாடு காட்டிய பரம்பரைச் சைவர்களான கோப்பெருஞ்சோழன் முதலான மன்னர்களுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.மத வேறுபாடு காரணமாக காதலைக் கூட(சமண இளவரசிகள்)மன்னர்கள் துறந்ததாகவும் சொல்லப்படுகிறது.
    மேற்குறிப்பிட்ட காரணங்கள் இம்முடிவிற்கு அடிப்படையாக இருக்கலாம்.எனினும் மேலும் நுட்பமான காரணம் என் தேடலில் கிடைக்குமிடத்து தங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

    ReplyDelete